கத்தியில்லாமல் போராடிய ஹீரோ…. குடும்பத்தை சைஃப் அலிகான் காப்பாற்றியது எப்படி?

Published On:

| By Kumaresan M

பாலிவுட்டின் மூத்த நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவரது மனைவிதான் நடிகை கரீனா கபூர். இந்த தம்பதிக்கு தைமூர், ஜெக் என இரு குழந்தைகள் உண்டு. மும்பையில் பாந்திரா பகுதியில் குடும்பத்துடன் சைஃப் அலிகான் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 16) அதிகாலை 4 மணியளவில் வீட்டுக்குள் திருடன் ஒருவன் புகுந்துள்ளான். வீட்டில் தேவையில்லாத சத்தம் எழுந்ததையடுத்து, சைஃப் அலிகான் எழுந்து பார்த்துள்ளார்.

வீட்டுக்குள் திருடனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும், பின் வாங்காமல் திருடனை பிடிக்க முயற்சித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது, திருடன் கையில் கத்தி இருந்துள்ளது. சைஃப் அலிகான் வெறும் கையுடன் அவனை பிடிக்க போராடியுள்ளார்.

இந்த தருணத்தில் திருடன் கத்தியால் 3 முறை சைஃப் அலிகானை குத்தி விட்டு தப்பிவிட்டான். இதையடுத்து, காயமடைந்த சைஃப் அலிகான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை பாந்திரா துணை கமிஷனர் உறுதி செய்துள்ளார். லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகானுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் திருடனை தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சைஃப் அலிகான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி – நடிகை ஷர்மீளா தாகூரின் மகன் ஆவார். 1993 ஆம் ஆண்டு பரம்பரா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

மும்பையில் வி.ஐ.பி.க்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எம்.குமரேசன்

தை மாத நட்சத்திர பலன்கள்: உத்திராடம்

அதானியை ஆட்டம் காண வைத்த ஹிண்டன்பெர்க் எடுத்த திடீர் முடிவு… என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share