பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கொள்ளையன் ஒருவனால் நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டார். மும்பை பாந்திராவிலுள்ள அவரின் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. சைஃப் அலிகானின் மனைவி கத்ரீனா கபூர் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாந்திரா ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அவரிடத்தில் பாந்திரா போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளையன் சைஃப் அலி கானின் 4 வயது மகன் ஜெக்கை பணய கைதியாக பிடித்து கொண்டு 1 கோடி வரை பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஏற்பட்ட கைகலப்பில் கொள்ளையன் கையில் வைத்திருந்த கத்தியால் சைஃப் அலிகானை 6 இடங்களில் குத்தியுள்ளான். இதையடுத்து, லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு, தற்போது, அவர் அபாய கட்டத்தை அவர் தாண்டியுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, சைஃப் அலி கானின் மனைவி கரீனா கபூர், சமூக ஊடகத்தில் அறிக்கையை வெளியிட்டார், அதில், தங்கள் குடும்பத்தின் பிரைவேசிக்கு மரியாதை தரும்படி கோரியுள்ளார். எங்கள் குடும்பத்திற்கு நம்பமுடியாத சவாலான நாளை கடந்து வந்துள்ளோம். இத்தகைய கடினமான நேரத்தில் ஊடகங்கள் எங்களுளின் தனி உரிமைய காக்க உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சைஃப் அலிகானின் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி கொள்ளையன் பாந்திராவிலுள்ள நடிகர் ஷாருக்கானின் வீட்டையும் வேவு பார்த்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்