பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவியின் வீடு, தற்போது கல்யாண கொண்டாட்டத்திற்காகத் தயாராகி வருகிறது.
முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் பிஸியாக நடித்து வர, அவரது தங்கை காதலரை மணம் புரியத் தயாராகி விட்டார்.
சாய் பல்லவி போலவே நடிப்பில் ஆர்வம் காட்டிய பூஜா கண்ணன் தமிழில் சமுத்திரக்கனியுடன் ‘சித்திரை செவ்வானம்’ என்னும் படத்தில் என்ட்ரி கொடுத்தார்.
அந்த ஒரு படத்தோடு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் பூஜா கண்ணனுக்கு அவருடைய காதலர் வினீத் என்பவருடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்த பூஜா, தற்போது நிச்சயதார்த்தம் முடிந்தது எனக்கூறி கைகளில் மெஹந்தியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்களில் பூஜா, சாய் பல்லவி இருவரும் சிரித்தபடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் பூஜா-வினீத் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விரைவில் தங்களது திருமண தேதி குறித்து பூஜா கண்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சோயப் மாலிக் திருமணம்: சானியா மிர்சா என்ன சொல்லி இருக்காரு பாருங்க!
”பொதுவிடுமுறை அறிவியுங்கள்” : பன்னீர் கோரிக்கை!