நடிகை சாய் பல்லவி தன்னுடைய தங்கை பூஜா கண்ணனுக்கு அலங்காரம் செய்து விட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனுடன் அவரின் 21-வது படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள ‘புஷ்பா 2’ விரைவில் வெளியாகவுள்ளது. அதோடு ‘தண்டல்’ என்ற தெலுங்கு படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
"சித்திர பூவே என் செல்லமடி நீ" 🎉🎊🎇 #SaiPallavi #SK21 pic.twitter.com/xEnAO5fPd3
— Manjari (@mazhil11) January 28, 2024
இந்த நிலையில் சாய் பல்லவி அவரின் தங்கை பூஜா கண்ணனுக்கு மேக்கப் செய்து விடும் வீடியோ, தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு, அவருடைய காதலர் வினீத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சாய் பல்லவி நடனமாடும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
தற்போது சாய் பல்லவி பூஜாவுக்கு கை, கால்களில் மருதாணி வைத்து விடுவது அவருக்கு மேக்கப் செய்து விட்டு புகைப்படம் எடுப்பது போன்ற கியூட் தருணங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”உடன் பிறந்தவளை விட சிறந்த தோழி உலகத்தில் இல்லை” என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக ஆதரவு: 9வது முறை பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது : கே.எஸ்.அழகிரி
Comments are closed.