‘இதுதான் உண்மையான ஆசிர்வாதம்’- சீக்ரெட் சொல்லும் சாய்பல்லவி

Published On:

| By Kumaresan M

சாய் பல்லவியை நடிகையாகத்தான் பலரும் அறிவார்கள். ஆனார், அடிப்படையில் அவர் ஒரு டாக்டர். எம்.பி.பி.எஸ் படித்துள்ள அவர், பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானார்.

உதகையை சேர்ந்த சாய் பல்லவி, அமரன் படத்தின் மூலம் எங்கேயோ போய் விட்டார். சாய் பல்லவி நடிப்பதோடு தனது வேலையை முடித்துக் கொள்ளவில்லை.

தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ,மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது போன்ற பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கேரளாவில் மீடியா ஒன் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சாய் பல்லவி கூறியிருப்பதாவது, ‘சின்ன வயசுல நாங்கள் பணக்காரர்கள் என்று நினைத்தேன். ஆனால், அப்படியில்லை. நாங்கள் சாதாரண குடும்பம்தான்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு அப்போது, எங்களிடம் பணமில்லை. இப்போது, ஏழை எளிய மக்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்ற அளவிற்கு என்னிடம் காசு இருக்கிறது.

இது தான் ஆசிர்வாதமாக நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார். தற்போது, ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார் சாய் பல்லவி. இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.47 கோடி வரை இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அமரன் படத்தின் வெளியீட்டின் போது மும்பையில் உதவி இயக்குநர்களுக்காகவும் சாய் பல்லவி குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது, அவர் பேசியதாவது,”இங்கு, ஒருவர் உதவி இயக்குநராக இருந்தால், அவர்கள் அடுத்த படத்துக்கும் வருகின்றனர். காரணம் அது மிகவும் நல்லதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். ஆனால் தென்னிந்தியாவில்,உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை.அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், திறமையாளர்களாகவும் இருந்தும், அவர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel