நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் NC23 படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க உள்ளார்.
நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் NC23. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, NC23 கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். இதனை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட பிரம்மாண்டமான படத்தில் கதாநாயகியாக நடிக்க மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகை சாய் பல்லவி வருகிறார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இதற்கு முன்பு லவ் ஸ்டோரி படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.
இராமானுஜம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!