தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனுடன் அவரின் 21-வது படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல அல்லு அர்ஜுனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள ‘புஷ்பா 2’ விரைவில் வெளியாகவுள்ளது. அதோடு ‘தண்டல்’ என்ற தெலுங்கு படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சாய் பல்லவி அவரின் தங்கை பூஜாவின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து வருகின்றன.
குறிப்பாக பூஜாவின் நிச்சயதார்த்த விழாவில் சாய் பல்லவி நடனம் ஆடிய வீடியோக்களும் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
#SaiPallavi Stunning Performance 🎊🎉🎇 pic.twitter.com/YPk8LfpFwl
— Manjari (@mazhil11) January 29, 2024
இந்த நிலையில் தங்கையின் காதல் திருமணத்திற்கு, சாய் பல்லவி அளிக்கும் அன்புப்பரிசு என்னவென்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் சென்னையில் செட்டிலாக திட்டமிட்டு இருக்கும் பூஜாவிற்காக, ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம் சாய் பல்லவி.
இதற்கான பத்திரப்பதிவிற்காக சாய் பல்லவி சமீபத்தில் சென்னை வந்து சென்றுள்ளார். இதையடுத்து தான் அவரின் பரிசு குறித்த விவரம் தற்போது வெளியில் தெரிய வந்துள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்வாக திறமையின்மையால் கீழ்வெண்மணியில் ஓலை குடிசைகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!