சிறந்த நடிகர் , முற்போக்கான அரசியல்வாதி எனப் பன்முக திறமை கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தீவிர அரசியலில் அவர் கவனம் செலுத்துவதில்லை. கட்சி பணிகளை அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இருவரும் இன்று தங்களது 33ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினர்.
விஜயகாந்த் – பிரமேலதா தம்பதியினர் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் பிரேமலதா சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்நிலையில் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சந்திரசேகர், என் உயிரைச் சந்தித்த போது என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வெளியான விஜயகாந்த்தின் புகைப்படத்தைப் பார்த்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், “நடிகனைத் தாண்டிய ஒரு மனிதன்.
நட்பு, மனித நேயம் என்றால் அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு வருடங்களாக அவரை பார்க்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை” என்று வேதனையுடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தி–
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் கால அவகாசமா?
”ஜெயலலிதா கட்சியவே இங்கு சிலர் ஏலம் விடுறாங்க!” – முதல்வர் ஸ்டாலின்