சப்தம்: விமர்சனம்

Published On:

| By uthay Padagalingam

Sabdham Tamil Movie Review

பயம் ஊட்டுகிறதா இந்த ‘சத்தம்’! Sabdham Tamil Movie Review

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், தமன் இசையமைப்பில், அறிவழகன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘ஈரம்’. அந்தப் படத்தின் முதல் காட்சி வரை, ’அது ஒரு ஹாரர் படம்’ என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. காரணம், ‘அது ஒரு ரொமான்ஸ், ஆக்‌ஷன் படமாக இருக்கும்’ என்ற எண்ணத்தையே அப்படத்திற்கான புரோமோஷன் பணி முன்னிறுத்தியது. அதனால், முதல் காட்சியில் அதிர்ச்சியை விட ஆச்சர்யமே அதிகமிருந்தது.

வழக்கமான ஹாரர் படமாக ஈரம் இல்லை என்பதால் அந்த ஆச்சர்யத்தின் சதவிகிதம் அதிகம். அதன்பிறகு ‘வல்லினம்’, ‘குற்றம் 23’, ‘ஆறாது சினம்’ ஆகிய திரைப்படங்களையும், ‘தமிழ்ராக்கர்ஸ்’ வெப்சீரிஸ்யும் இயக்கினார் அறிவழகன். Sabdham Tamil Movie Review

அவர் இயக்கிய ‘பார்டர்’ நெடுநாட்களாகக் காத்திருப்பில் இருக்க, இதோ அவரது இன்னொரு திரைப்படமான ’சப்தம்’ இப்போது வெளியாகியிருக்கிறது.

ஈரம்’ போன்றே இப்படமும் வித்தியாசமான ஹாரர் படமாக இருக்கும் என்றே முன்னிறுத்தியது படக்குழு. ஒருபடி மேலே சென்று, ‘இது ஈரம் 2 ஆக இருக்கும்’ என்றன சில ஊடகங்கள்.

அப்படிப்பட்ட திரையனுபவத்தை ‘சப்தம்’ தருகிறதா? Sabdham Tamil Movie Review

ஊடுருவும் பயம்! Sabdham Tamil Movie Review

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி. அங்கு பயிலும் ஒரு மாணவன், ஒரு மாணவி இருவரும் ஒரு வார கால இடைவெளியில் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்கு முன்னதாக, அவர்களது நடத்தையில் மாற்றத்தை உணர்ந்ததாகச் சொல்கின்றனர் நண்பர்கள், தோழிகள். அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பாக, அது பற்றிய எண்ணங்களைக் கனவாக உணர்கிறார் அவந்திகா (லட்சுமி மேனன்). அவர், அக்கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு மாணவியாகவும், இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இந்த தகவலை அவந்திகா யாரிடமும் பகிரவில்லை. காரணம், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் இல்லை என்ற தலைப்பில் அவர் தனது ஆய்வறிக்கையைத் தயார் செய்து வருவதே. Sabdham Tamil Movie Review

இந்த நிலையில், ஊடகங்களில் அந்த கல்லூரியில் பேய் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. அதனை முறியடிக்கும் வகையில், மும்பையில் இருந்து ஒரு ‘பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டரை’ வரவழைக்கக் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்கிறது.

அவ்வாறே ரூபன் (ஆதி) அந்த மருத்துவக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

தான் ஆய்வு செய்வதற்கென்று சில கருவிகளை எடுத்து வந்திருக்கிறார் ரூபன். அதனைக் கொண்டு, அந்தக் கல்லூரியிலுள்ள ஒவ்வொரு இடத்தையும் ஆய்வு செய்கிறார். மகளிர் விடுதியைச் சோதனையிடும்போது, அவந்திகாவின் அறை பக்கம் வித்தியாசமானதொரு அனுபவத்தைப் பெறுகிறார். தான் உணர்ந்த அதிர்வினை ரூபன் புறக்கணிக்கிறார்.

அது பெரிய தவறு என்பதை பின்னர் உணர்கிறார். Sabdham Tamil Movie Review

ஒருகட்டத்தில், இறந்தவர்களின் உடலில் இருந்த ஒரு அடையாளத்தை மருத்துவக் கல்லூரியின் பழைய நூலகக் கட்டடத்தில் காண்கிறார். அப்போதுதான், சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடம் ஒரு தேவாலயமாக இருந்ததை அறிகிறார்.

அது பற்றி மேலும் ஆராயும்போது, அவந்திகாவும் அந்த இடத்தில் இருந்தால் சில தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று ரூபன் நினைக்கிறார். வேண்டாவெறுப்பாக, அங்கு அவந்திகாவும் வருகிறார்.

அவர் வந்தபிறகு வினோதமாகச் சில செயல்கள் அரங்கேறுகின்றன. அவந்திகா கொண்டுள்ள கருத்து உடைபடும்விதமாக, அங்கு அமானுஷ்ய சக்திகள் கோர தாண்டவமாடுகின்றன.

அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘சப்தம்’ படத்தின் இரண்டாம் பாதி.

அத்தியாயங்களாகக் கதை விரியும் காரணத்தால், திரைக்கதையில் ஒளிந்திருக்கும் பயம் மெல்ல நம்மை ஊடுருவுகிறது. அந்த அனுபவமே இப்படத்தின் பலம்.

இந்தக் கதையில் பேய்களின் அட்ராசிட்டியும், அவற்றின் பின்னணி என்ன என்பதும் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், இந்தக் கதையில் பேய்களை இம்சிக்கிற வில்லன் தரப்பு வலுவாகக் காட்டப்படவில்லை. உண்மையைச் சொன்னால், அது போதாமையாக உள்ளது. அதுவே இப்படத்தின் பலவீனம்.

’வேற லெவல்’ அனுபவம்! Sabdham Tamil Movie Review

’ஹாரர்’ படத்தில் மனதைத் தொடுகிற ‘பெர்பார்மன்ஸ்’ பார்ப்பது அபூர்வம். அதேநேரத்தில், கதைக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும் கேடு விளையாத வகையில் திரையில் தோன்றுவது அவசியம். ஆதி, லட்சுமி மேனன் இருவரும் அதனைத் திறம்பட எதிர்கொண்டுள்ளனர். இவர்களே பிரதானம் என்பதால் இதர பாத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகின்றன.

விவேக் பிரசன்னா, ராஜிவ் மேனன், எம்.எஸ். பாஸ்கர் தொடங்கி சிம்ரன், லைலா, ராஜிவ் மேனன், கோபி கண்ணதாசன் உள்ளிட்ட சுமார் ஒரு டஜன் பேர் அப்படித்தான் திரையில் வந்து போயிருக்கின்றனர். Sabdham Tamil Movie Review

முன்பாதியில் வெறுமையை உணர்ந்துவிடாமல் நம் கைபிடித்து இழுக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. பின்பாதியில் அவருக்கான பங்களிப்பு படத்தின் ஆன்மாவைச் சிதைத்துவிடக்கூடாது என்று அவரது இருப்பை இயக்குனர் தவிர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குனர் மனோஜ்குமார் கூட்டணி ஒவ்வொரு பிரேமையும் செறிவுற வடிவமைத்திருக்கிறது.

இயக்குனர் காட்ட விரும்பிய உலகை உருவாக்க மனோஜ் குழுவினர் உழைத்திருக்கின்றனர் என்றால் அருண் குழுவினர் ஒட்டுமொத்த காட்சியாக்கமும் எத்தகைய தாக்கத்தைப் படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியேறுகையில் ரசிகர்கள் உணர வேண்டுமென்பதில் அக்கறை காட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், முன்பாதிக் காட்சிகளில் இரண்டு, மூன்று நொடிகளுக்கு ஒருமுறை ஷாட்களை மாற்றியவாறே இருக்கிறார். என்னதான் ‘தொழில்நுட்ப வல்லமையை’ வெளிப்படுத்தினாலும், அது கண்களை அயர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

ஸ்டன்னர் சாமின் ஸ்டண்ட் காட்சி வடிவமைப்பு, டி.உதயகுமாரின் ஆடியோகிராஃபி, ஸிங்க் சினிமாவின் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று தொழில்நுட்ப அம்சங்கள் ஒவ்வொன்றும் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, இதுவரை தான் இசையமைத்த கமர்ஷியல் படங்களின் காட்சிகள் நினைவில் வராத வகையில் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிவழகன்.

கிட்டத்தட்ட இதே தொனியிலமைந்த காட்சியாக்கத்துடன், கருத்துச் செறிவுடன் சமீப ஆண்டுகளில் சில ஹாரர் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது பயம், மிரட்சியுடன் ஒருவித அசூயையும் அருவெருப்பும் நம் மனதை ஆக்கிரமிக்கும்.

அப்படியொரு சூழல் தன் படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தியிருக்கிறார் அறிவழகன். அந்த விஷயத்தில், ‘ஈரம்’ படம் தந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்திருக்கிறது.

‘இது மருத்துவக் கல்லூரிதான்’ என்று நம்பும்விதமான உள்ளடக்கத்தைத் திரையில் காட்டியிருக்கிறார் அறிவழகன். அதற்கான உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

’ஒரு பேய்க்கதை என்பது சாதாரண பார்வையாளர்கள் அறியாத சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். அது நம் நாட்டில் அல்லாமல் வேறு நாடுகளில் பின்பற்றப்படுவதாகக் கூட இருக்கலாம். அந்த வகையில், மெக்ஸிகோவில் அமானுஷ்ய செயல்களில் ஈடுபடுவோர் வௌவால்களை பயன்படுத்துவார்கள்’ என்பதனைத் திரைக்கதையின் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அறிவழகன். வசனமாக ஓரிடத்தில் அது இடம்பெற்றாலும், அது பற்றி முன்கூட்டியே பல இடங்களில் சொல்கிறார். அந்த நுணுக்கம் தான் ‘சப்தம்’ திரைக்கதையின் பலம். Sabdham Tamil Movie Review

இப்படிச் சில திருப்பங்கள் பெரிதாகத் திரைக்கதையில் உள்ளன. சில திருப்பங்கள் மிக நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை ரசிக்கும்போது, ‘இது வேற லெவல் படம்’ என்று தோன்றக்கூடும்.

‘ஈரம்’ படத்தில் நீர் வழியே பேய் தன் வேலையைக் காட்டுகிறது என்றால், இதில் ‘சப்தம்’ அப்படிப் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில், வில்லன் தரப்பும் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அவர்கள் ஏன் அதனைச் செய்கிறார்கள்? அந்த கேள்வியே இப்படத்தின் பின்பாதியைச் சுவாரஸ்யமாக்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான பதிலை ‘அவசர அவசரமாக’த் திரையில் சொன்ன வகையில் கொஞ்சமாய் குழப்பியடித்திருக்கிறார் அறிவழகன்.

அந்த இடங்களைச் சரிப்படுத்தியிருந்தால், இப்படம் இன்னும் உயரம் தொட்டிருக்கும்.

போலவே, இந்த கதையில் நாயகன் ஆதியின் பாட்டி பாத்திரம், நண்பனாக வரும் விவேக் பிரசன்னா பாத்திரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. அதனால், அவை வலிந்து திணிக்கப்பட்டவையாகத் தெரிகின்றன. ஒருவேளை இந்தியில் அல்லது வேறு மொழிகளில் இப்படம் ‘ரீமேக்’ செய்யப்பட்டால், அது போன்ற அம்சங்களைச் சீர்படுத்தலாம்.

‘கால்ஷீட் சொதப்பல்’ அல்லது வேறு ஏதோ காரணங்களால், இயக்குனர் விரும்பியவாறு இப்படத்தின் கடைசி ஒருமணி நேரம் அமையவில்லை என்பது புரிகிறது. ஏனென்றால், அவ்வாறு அவர் சார்பாக யோசிக்கும் அளவுக்கு முன்பாதி சிறப்பாக உள்ளது.

அந்த முரணை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றால், இப்படம் நாம் இதுவரை பார்த்தறியாத ‘திரையனுபவத்தை’ நிச்சயம் தரும். அதனைப் புதுமை என்று சொல்லிவிட முடியாது; அதேநேரத்தில், ‘அரதப்பழசு’ என்று புறந்தள்ளவும் முடியாது. அந்த வகையில், ‘சப்தம்’ படம் அறிவழகனின் ‘கம்பேக்’ ஆக அமைந்திருக்கிறது..! Sabdham Tamil Movie Review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share