Saba Nayagan movie press meet

பள்ளிக்கால வாழ்க்கையை கிளறிவிடும் ‘சபாநாயகன்’: அசோக் செல்வன்

சினிமா

அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபாநாயகன்’. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். Saba Nayagan movie press meet

அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் பேசும்போது,

”சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஷ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம்.

படத்தின் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் பேசும் போது,

”ஓ மை கடவுளே திரைப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நானும் அசோக்செல்வனும் இந்த சபாநாயகன் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறோம். இத்திரைப்படம் நாம் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து திரையரங்கிற்கு ஒன்றாக சென்று குதூகலிப்பதற்கான திரைப்படம்.,

பாடல்களுக்கான காட்சி தொகுப்புகள் மிகவும் சிறப்பாக அழகான முறையில் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஜாலியான திரைப்படத்திற்கு இசையமைத்தது ஒரு நல்ல அனுபவம். படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்று வந்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். ” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலசுப்ரமணியம் பேசும் போது,

”இப்படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர். அவர் தான் இயக்குநர் கார்த்திகேயனை எனக்கு அறிமுகப்படுத்தினார். கார்த்திகேயன் கதை சொல்லும் போது எனக்கு கதை மிகவும் பிடித்தது. இது போன்ற கதைகள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்று எனக்குத் தோன்றியது. மூன்றுவித காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது. இதில் கல்லூரி கால வாழ்க்கையை முதலாவது ஷெட்யூலில் படப்பிடிப்பு செய்தோம். அதில் நான் ஒளிப்பதிவு செய்தேன். பிறகு என் சீடர் தினேஷ் இரண்டாம் ஷெட்யூல் அதாவது பள்ளிகால வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்தான்… பிரபு ராகவ் கல்லூரி காலத்திற்குப் பின்னர் வரும் வாழ்க்கைப் பகுதியை ஒளிப்பதிவு செய்தார் என்றார்.

Saba Nayagan movie press meet

நாயகன் அசோக் செல்வன் பேசும் போது,

சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போதுதான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார்.

முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

லியோன் ‘ஓ மை கடவுளே’ படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது.

அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும். மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும்.” என்றார்.

இராமானுஜம் Saba Nayagan movie press meet

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

முதல்வரை போல் உதயநிதிக்கும் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள்!

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இணைந்த மெட்ராஸ் சாப்பர்ஸ்!

மாமல்லபுரத்தில் அடாவடி வசூல்: ஆட்சியர் அதிரடி உத்தரவு! meet

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *