உலகின் மிகப்பெரிய சினிமா விருதாக, அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் அகாடமி விருது கருதப்படுகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான 95வது அகாடமி விருதுகளில் 10 பிரிவுகளுக்கான பரிந்துரைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதில் ராஜமெளலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் ‘ஒரிஜினல் பாடல்’ பிரிவில் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் மொத்தம் 81 பாடல்கள் விருதுக்காக பதிவு செய்யப்பட்டது. அதில் தற்போது நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பாடல்களில் ஒன்றாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பாடல் இடம் பெற்றுள்ளதால் விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
“நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பிடித்ததையடுத்து, #RRRForOscars என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவதுடன், ரசிகர்கள் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த உலக திரைப்படத்திற்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ’லாஸ்ட் ப்லிம் ஷோ’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
வரலாற்று தோல்வி… பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்!
சிவாஜி குடும்ப சொத்துப் பிரச்சினை: சமரசம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்