ஆஸ்கர் ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ’ஆர்.ஆர்.ஆர்.’

2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த அசல் பாடலுக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

முன்னதாக படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு உலகின் உயரிய திரைப்பட விருதுகளான கோல்டன் குளோப் மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் ஆகிய விருதுகளை வென்றுள்ளது.

இந்தியாவின் முதல் கோல்டன் குளோப் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்ததை அடுத்து பிரதமர் மோடி முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து அனைவரின் கவனமும் ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியலுக்கு ஆர்.ஆர்.ஆர். தகுதி பெறுமா என்பதை நோக்கி குவிந்தது.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் இறுதி பரிந்துரைப் பட்டியலுக்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளது.

அதன்படி 95வது ஆஸ்கர் விருது விழா பரிந்துரை பட்டியலில் சிறந்த அசல் பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது விழா நடக்கும்போது இந்தியாவுக்கு ஒரு ஆஸ்கர் கிடைக்காதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, உலகளவில் கவனம் ஈர்த்துள்ள ஆர்.ஆர்.ஆர் அதனை தீர்க்கும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவானது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

மேம்பாலத்தில் இருந்து கொட்டிய பணமழை : கபடி வீரர் கைது!

நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts