விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ரோமியோ’ திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விஜய் ஆண்டனி. நீண்ட இடைவெளிக்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், ரொமான்டிக் காமெடி திரைப்படமான ரோமியோவில் நடித்துள்ளார்.
இதில் அவருடன் இணைந்து மிர்ணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். படத்தின் பர்ஸ்ட் லுக் சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் முதலிரவில் ஹீரோயின் மதுபான பாட்டிலுடன் இருப்பது போல் காட்டப்பட்டது.
தற்போது படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கிடையில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் ரோமியோ படத்தை மோசமாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நடிகர் விஜய் ஆண்டனி காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு. புளுசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களைக் கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
— vijayantony (@vijayantony) April 20, 2024
என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம்.. போய் பாருங்க புரியும்.. ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க”, என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? – ராதாகிருஷ்ணன் விளக்கம்!
“சனாதனம் குறித்த கருத்துக்கு உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்” – ரேவந்த் ரெட்டி