ரேடியோ ஜாக்கியாக தனது மீடியா வாழ்க்கை தொடங்கி இன்று பல நிகழ்ச்சிகளின் முக்கிய தொகுப்பாளராகவும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகராகவும் தன் திறமையை இந்த உலகிற்கு நிருபித்து காட்டியவர் RJ விஜய்.
தற்போது RJ விஜய் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறார்.
இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மேத்யூ வர்கீஸ், கல்யாணி நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குனர் ஹேமநாதன் இந்த படத்தை இயக்குகிறார். டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கான படபூஜை நேற்று (டிசம்பர் 12) நடந்த நிலையில், அடுத்த 40 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு வரும் காதல் குறித்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகுவதாகவும், இந்த படத்தில் RJ விஜய் ஒரு தொகுப்பாளராக நடிக்கிறார் என்றும் அஞ்சலி நாயர் ஒரு பாடகராக நடிக்கிறார் என்றும்,
கூடிய விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ஆளுநர் ரவிக்கு எதிராக கூடுதல் மனு… இன்று உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகள் எவ்வளவு? – ரவிக்குமார் எம்.பி கேள்விக்கு மத்திய அரசின் பதில்!