ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி . கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தை ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வை போஸ்டரில் கையில் கத்தரி உடன் சலூன் கடையில் பணியாற்றுவது போல இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. இந்த படம் வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமானுஜம்
39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!
5 மருந்துகளுக்குத் தடை : பதஞ்சலியின் பதில்!