ரஜினியின் “தலைவர் 170” பட ஹீரோயின்ஸ்!

சினிமா

ஜெயிலர் ஃபீவர் முடிந்து சில நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் தலைவர் 170 படத்திற்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் 170 படத்தை ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

தற்போது தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்ஸ் குறித்த விவரங்களை லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து வருகிறது.

ஏற்கனவே தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், துஷாரா விஜயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் என்ற இரண்டு அப்டேட்களை லைக்கா நிறுவனம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில் தலைவர் 170 படத்தில்  பிரபலமான இரண்டு நடிகைகள் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் இன்று (அக்டோபர் 2) அறிவித்துள்ளது.

இறுதி சுற்று, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ரித்திகா சிங் மற்றும் மோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் மஞ்சு வாரியர் ஆகியோர் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரித்திகாவிற்கு சமீபத்தில் வெளியான எந்த படமும் கை கொடுக்காததால், மீண்டும் ரித்திகாவின் திறமைக்கு தலைவர் 170 படம் ஓர் அங்கீகாரத்தை உருவாக்கி தரும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல் கேரள நாயகி மஞ்சு வாரியருக்கும் சமீபத்தில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காததால் தலைவர் 170 வது படம் ஒரு பிரேக் த்ரூவாக அமையும் என்று நம்புவோம்.

தலைவர் 170வது படத்தில் இத்தனை திறமையான நடிகைகள் இணைவது படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவாக அமைய வாய்ப்புள்ளது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் ஆர்.ரவியின் புதிய செயலாளர் நியமனம்!

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *