தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. எனினும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் கூடுதலாகவே வசூலிக்கப்பட்டு வருவதாக சினிமா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை அதிகாரபூர்வமாக உயர்த்தும் வகையில் 15.10.2017 அன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணை வெளியாகி 6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், திரையரங்குகளை பராமரிக்கும் செலவினங்கள் அதிகரித்து வருவதாக கூறி திரையரங்க உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொள்ள அரசு ஆவண செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கடந்த 16.10.2017 அன்று வெளியிட்ட அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்துவிட்டதாலும் நடைமுறை செலவுகள் அதிகரித்துவிட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது.
எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி கேட்டுகொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி குறைந்தபட்ச கட்டணமாக 120 ரூபாயும், அதிகபட்சமாக 450 ரூபாய் என கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இராமானுஜம்
எடப்பாடி புதிய கார் வாங்கியது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்!
ஓடிடியில் முதலிடம் பிடித்த வீரன்!