காந்தாரா – 1 : களரி கற்கும் ரிஷப் ஷெட்டி

Published On:

| By Kavi

பான் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ காந்தாரா – 1’ ற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி களரி கற்று வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷப ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘ காந்தாரா ‘. கர்நாடகாவின் காடுகளுக்குள் இருக்கும் சிறு தெய்வம், அரசியல், எனப் பல்வேறு விஷயங்களை பேசிய இந்தத் திரைப்படம் கன்னடம் மட்டும் இன்றி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது.

ஏற்கனவே’ காந்தாரா’ படத்தின் தொடக்க கதையான ‘ காந்தாரா – 1 ‘ படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. அந்தப் படத்திற்காக களரிபயட்டு கலையை கற்று வருகிறார். சமீபத்தில் அவர் களரி பயிலும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனத்தின் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த ‘ காந்தாரா – 1 ‘ படத்திற்காக குந்தபுரா வில் பிரம்மாண்ட செட் ஒன்று அப்படக்குழுவால் போடப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த எந்த வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், முதல் பாகத்திற்கு சிறப்பாக இசையமைத்த அஜனிஷ் லோக்நாத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி வழக்கு : தனியார் வங்கி மேலாளரிடம் குறுக்கு விசாரணை!

டிஜிட்டல் திண்ணை: இரண்டரை மணி நேர புயல்… திக்குமுக்காடிய அமைச்சர்கள்… ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!

பாலியல் குற்றவாளி சிவராமன் தற்கொலை முயற்சி : பவானீஸ்வரி விளக்கம்!

விண்ணை தொட்ட வினேஷ் போகத் மார்க்கெட் …விளம்பர சம்பளம் எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share