தன்னை பற்றி அவதூறாக பேசியதாக பாடகி சுசித்ராவிற்கு நடிகை ரீமா கலிங்கல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா எஸ்.எஸ் மியூசிக் என்ற தனியார் யூடியூப் சேனலிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், ”நடிகை ரீமா கலிங்கல் தனது வீட்டில் பல முறை பார்ட்டி நடத்தியுள்ளார். அந்த பார்ட்டிக்கு பல இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருவார்கள். அவர்கள் போதைப் பொருட்களை சர்வ சாதாரணமாக உட்கொள்வார்கள். பல பெண்கள் அங்கு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை ரீமா கலிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நடிகை சுசித்ரா யூடியூப் சேனலிற்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் 2017-இல் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாமல், ஹேமா குழு மூலமாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன் லால், மம்மூட்டி மற்றும் ஃபஹத் ஃபாசில் போன்ற இளம் நடிகர்களின் வாழ்க்கையை நாசப்படுத்த முயன்றார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ஹேமா குழு எதற்கு உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். இதற்கு மாறாக பேசும் நபர்களை நாம் கேள்வி கேட்க வேண்டும்.
இதெல்லாம் பிரதான ஊடகங்களின் கவனத்திற்கு செல்லவில்லை. ஆனால் நான் ஒரு முறை கைது செய்யப்பட்டேன் என்று செய்தித்தாளில் அவர் படித்ததாக சொன்னது ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நான் ஒன்றைத் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவே இல்லை.
அதனால் ஹேமா குழு அறிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவிடம் சுசித்ராவின் மேல் புகார் அளித்துள்ளேன். மேலும் சுசித்ராவிற்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஹேமா குழு உருவாவதற்குக் காரணமாக இருந்த ‘வுமன் சினிமா கலெக்டிவை நிறுவியவர்களில் ரீமா கலிங்கலும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த ஹெச்.ராஜா
“மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கும் உதவும்” – சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி!
காசி படத்தில் நடித்த பிறகு, பார்வையில்லாமல் போய் விட்டது!- நடிகர் விக்ரம் சொல்லும் காரணம்
ரேஷன் கடையில் நவீன கொள்ளை… வாங்காத பொருளுக்கு வாங்கியதாக பதிவு!