கார்த்தி படத்தில் ஜோக்கர் கூட்டணி!

சினிமா

அர்த்தமுள்ள திரைப்படங்களை  தொடர்ந்து தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று 8.11.2022 சென்னையில்  பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் படைப்பாற்றலும், சமூகப் பொறுப்பும் சேர்ந்து இயங்க முடியும் என்பதை தான் இயக்கும் படங்கள் மூலம் நிரூபித்து வருபவர் இயக்குநர் ராஜு முருகன். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் ‘ஜோக்கர்’.

மீண்டும் இதே கூட்டணி ‘ஜப்பான்’ மூலம் மீண்டும் இணைகிறது. 2007ஆம் ஆண்டு பருத்திவீரன் படம் மூலம் நாயகனாக அறிமுகமானதிலிருந்து ஜனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் தனித்துவம் மிக்க நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி.

‘சகுனி’, ‘காஷ்மோரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் கார்த்தி.

இது அவரது 25வது படம் என்பது இந்தப் படத்தை இன்னும் சிறப்புக்குரியதாக்குகிறது.

கார்த்திக்கிற்கு ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர்.

‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன்,

‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே கார்த்தி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘டாணாக்காரன்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

‘இந்த படத்துக்கான முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது.

இராமானுஜம்

சந்திர கிரகணம்: இந்தியாவில் எங்கு எப்போது தெரியும்?

நெருங்கும் தீர்ப்பு: பதறும் வேலுமணி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *