Restrictions on release of Tamil Movies
தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகங்கள் அனைத்தும் தங்கள் மொழி சினிமா வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
தங்களது மொழி படங்கள் வெளியாகும்போது பிற மொழி படங்கள் வெளியானால் அவற்றுக்கு திரையரங்குகளை ஒதுக்கீடு செய்வதில் திரையரங்குகளுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட ஒற்றுமை தமிழ் திரையுலகில் எப்போதும் ஏற்பட்டதில்லை என்பது ஆச்சரியமான உண்மை.
பொங்கல் திருநாளையொட்டி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்துள்ள மிஷன் 1 ஆகிய படங்கள் வரும் ஜனவரி 12ம் தேதி அன்று வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நாளில் மேற்கண்ட படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதுபோன்று வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டாம் என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகரசங்கராந்தியை முன்னிட்டு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ரவி தேஜாவின் ஈகிள், வெங்கடேஷின் சைந்தவ், நாகார்ஜுனாவின் நா சாமி ரங்கா மற்றும் பிரசாந்த் வர்மாவின் ஹனுமான் ஆகிய ஐந்து முன்னணி நடிகர்கள் நடித்துள்ள தெலுங்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
எனவே அந்த படங்களுக்குதான் திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் தெலுங்கு சினிமா சங்கங்கள் உறுதியான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.
இதனால் ஜனவரி 12 அன்று அயலான், கேப்டன் மில்லர், மிஷன் 1 ஆகிய படங்கள் தெலுங்கு மொழியில் வெளியாகாது பொங்கல் திருநாள்முடிந்து இரண்டாவது வாரத்தில்தான் தமிழ் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கப்பட்டு படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக தெலுங்கு சினிமா வர்த்தக சபை வட்டாரத்தில் விசாரித்தபோது, ”மகரசங்கராந்தி வெளியீடு என்பது தெலுங்கு சினிமாவுக்கு முக்கியமான வசூல் காலமாகும்.
அதனால் எங்கள்மொழி சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாட்டிலும் அது தானே கடைப்பிடிக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் தமிழ் படங்கள் வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில் தாராளமய கொள்கையுடன்தான் நாங்கள் இருக்கிறோம்” என்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கிளாம்பாக்கம் : பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டம்!
”தகுதியில்லா நிர்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும்: ஐ.ஆர்.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு
பொங்கல் தொகுப்பு அறிவிப்பு… பணப்பரிசு இல்லை!
Restrictions on release of Tamil Movies