Vijay Relief aid in Nellai

நெல்லையில் நிவாரண உதவி : விஜயகாந்த் மறைவால் தயங்கிய விஜய்

சினிமா

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 30) நேரில் வழங்க உள்ளார்.

அவருடைய நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில் 28ஆம் தேதி தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்து விட்டார். இதனால் இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை வழங்கலாமா வேண்டாமா என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார் விஜய்.

விஜயகாந்த் இறந்த சோக அதிர்வுகள் அடங்குவதற்குள் இது போன்ற ஒரு நிகழ்வை நடத்த வேண்டுமா என்று விஜய் யோசித்ததாக தெரிகிறது.

ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள், ‘நீங்கள் கேளிக்கைகள் எதுவும் நடத்தவில்லை. விஜயகாந்த் உயிரோடு ஆக்டிவ் ஆக இருந்திருந்தால் இதே நெல்லை தூத்துக்குடிக்கு நிவாரணம் வழங்க சென்று இருப்பார். அதனால் இப்படி ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்துவதில் தவறில்லை” என்று கூறியுள்ளனர். அதையடுத்தே இந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டபடி சம்மதித்துள்ளார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்!

விஜயகாந்தின் தவசி படத்திற்கு சீமான் வசனம் எழுதினாரா?… இயக்குநர் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0