5 இடங்களில் மட்டும் விஜய்யின் வாரிசு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழகத்தின் 2 உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித்குமார் ஆகியோர் நடித்துள்ள படங்கள் 2023 பொங்கலுக்கு ரிலீசாகிறது. அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
விஜயின் வாரிசு படத்தை தமிழகத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார்.
இந்நிலையில் வாரிசு’ படத்தை 4 ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இன்று (டிசம்பர் 17) தெரிவித்துள்ளது.
வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமம் பிரச்சினை இருந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்த வீடியோவில், “சென்னை, கோவை,செங்கல்பட்டு மற்றும் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களில் வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியா
பலாத்கார குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: பில்கிஸ் பானு மனு தள்ளுபடி!
அமைச்சர்..அதிகாரி..செருப்பு சர்ச்சை!