விஷாலின் லத்தி : பெயரை போடுமா ரெட் ஜெயண்ட்?

சினிமா

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் லத்தி. இது விஷாலின் 32ஆவது படம். இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த வருடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்ட லத்தி பட வேலைகள் முழுமையாக முடிவடையாததால் பட வெளியீடு தள்ளிப்போனது.
டிசம்பர் 22 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று தற்போது அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவேண்டும் என உதயநிதியிடம் தொலைபேசியில் விஷால் கேட்டதாகவும் அதற்கு இப்ப என்ன? என தான் கேட்டதாகவும் உதயநிதி கலகத்தலைவன் படம் வெளியானபோது ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார்.

தொடர்ச்சியாக விஷால் நடித்த படங்கள் வணிகரீதியாக தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் லத்தி படத்தை வெளியிட ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவன நிர்வாகிகள் தயக்கம் காட்டியுள்ளனர். தற்போது அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டனராம்.

விஷால் நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் மூலம் இருக்கும் நிதி பிரச்சினைக்களுக்காக திருச்சி, திருநெல்வேலி ஆகிய இரண்டு விநியோகப் பகுதி உரிமைகளை வேறு விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஏரியா தவிர தமிழகமெங்கும் லத்தி படத்தை வெளியிடவிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அவ்விரண்டு பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில், வெளிப்படையாக ரெட் ஜெயண்ட் பெயர் போட்டு வெளியிடுவார்களா? அல்லது பெயர் போடாமல் வெளியிடவிருக்கிறார்களா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட காரணத்தால் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் ரெட் ஜெயண்ட் மூவீஸ், படத்தை வெளியிடுவதற்காக திரையரங்கில் வாங்கும் முன் தொகை, வெளியிடுவதற்கான செலவுகள் இரண்டும் வசூல் மூலம் கிடைக்கவில்லை என்றால் தொலைக்காட்சி உரிமைக்கான தொகையில் அதனை சமன் செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இராமானுஜம்

உதயநிதி பிறந்தநாள்: மெரினாவில் படகு போட்டி!

யாருடன் கூட்டணி? : டிடிவி தினகரன் சூசகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *