எ.எஸ்.டி பிலிம்ஸ் தயாரிப்பில் விதார்த் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குய்கோ. இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
தற்போது இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதே தேதியில் விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படங்கள் வெளியாகிறது.
எனினும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியிட முன்வந்துள்ளதால் எளிதாக மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குடும்பங்கள் அனைத்தும் கொண்டாடும் விதமாக தணிக்கையில் குய்கோ படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: டிசம்பருக்குள் துரைமுருகனை நோக்கி ED… டென்ஷன் ஸ்டாலின்
”ஆளுநர் மீதான வழக்கில் பின்வாங்க மாட்டோம்”: அமைச்சர் ரகுபதி உறுதி!