சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் தயாரிப்பு, வெளியீடு என 2000 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களின் தமிழ்நாடு திரையரங்க உரிமைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
இந்த வருடம் மட்டும் எஃப்.ஐ.ஆர், எதற்கும் துணிந்தவன் , ராதேஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி நம்பி, குளுகுளு, லால் சிங் சத்தா,
திருசிற்றம்பலம், டைரி, கோப்ரா , கேப்டன், வெந்து தணிந்தது காடு ,பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்தார் ஆகிய 17 படங்களை வெளியிட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கு இந்தப் படங்களின் மூலம் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் 90% உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாகவே நடைபெற்றுள்ளது.
தமிழ் அல்லது வேற்று மொழி படங்களை தமிழகத்தில் திரையிட ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தவிர, வேறு நிறுவனங்கள் இல்லை என்று கூறப்பட்டுவரும் நிலையில்,
கன்னடத்தில் தயாராகும் பான் இந்தியா படங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
ஏற்கனவே கன்னட மொழியில் தயாரான கேஜிஎஃப்-2, காந்தாரா படங்களின் தமிழ் பதிப்பை டீரீம் வாரியார் வெளியிட்டனர்.
தீபாவளிக்கு வெளிவரும் பிரின்ஸ் திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் வெளியிடுகிறார்
கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றியிருக்கிறது.
கன்னடத்தில் முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.
இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.
இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
இந்து மக்களின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, என்.கே. புரொடக்க்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் கன்னடத்தில் தயாராகும் பான் இந்தியா படங்களை கையகப்படுத்தும் முயற்சியாக கே.வி.என் புரடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
களத்தில் போட்டியாளர்கள் யாரும் இல்லாது ஆதிக்கம் செலுத்தி வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம், தற்போது கோபுரம் பிலிம்ஸ், சக்தி பிலிம் பேக்டரி களத்திற்கு வந்துள்ளது தமிழ் சினிமா வியாபாரத்தில் தனிநபர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இராமானுஜம்
சட்டமன்றத் தொடரையே புறக்கணிக்கலாமா? எடப்பாடி அவசர ஆலோசனை!
எடப்பாடி புறக்கணிப்பு: சபாநாயகர் விளக்கம்!