நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்திற்காக தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். தலைவர் 170 படத்தில் ரஜினி உடன் பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தையும் லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் லால் சலாம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் லால் சலாம் படம் குறித்த ஒரு அப்டேட் இன்று (அக்டோபர் 12) மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது என்று லைகா நிறுவனம் அறிவித்தது. அதன்படி மாலை 4.30 மணிக்கு லால் சலாம் படத்தின் திரையரங்கு ரிலீஸ் உரிமை ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து உள்ளது.
https://twitter.com/LycaProductions/status/1712422937708679484
’வை ராஜா வை’ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் என்பதாலும், ரஜினி தனது மகள் இயக்கத்தில் நடித்திருப்பதாலும் லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்த கோச்சடையான் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யா லால் சலாம் மூலம் அந்த வெற்றியை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா