சலார் படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!

Published On:

| By Monisha

red gaint movies releasing salaar

ரெபல் ஸ்டார் நடிகர் பிரபாஸ், நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சலார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் ப்ரித்விராஜ், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கேஜிஎஃப் படத்தின் வெற்றியை போலவே சலார் படமும் பிரம்மாண்ட வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ மற்றும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சலார் படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் சலார் படத்தின் கேரள திரையரங்கு ரிலீஸ் உரிமையை நடிகர் ப்ரித்விராஜின் ’ப்ரித்விராஜ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது சலார் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சலார் வெளியாகும் அதே டிசம்பர் 22ஆம் தேதி அன்று ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள “டன்கி” (Dunki) திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட்டதக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஓபிஎஸ் மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம்!

ரிஷப் பண்ட் தான் டெல்லி கேப்டன்: அடித்து சொல்லும் கங்குலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel