“இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தில் சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் காமெடிப் படமாக வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ்.
திரையரங்குகளில் மக்கள் வரவேற்பைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ஜீ 5 தளத்தில் வெளியானது. நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம் தற்போது ஜீ 5 தளத்திலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதுவரை ஜீ 5 தளத்தில் வெளியான படங்களில் அதி வேகத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
டிடி ரிட்டர்ன்ஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ஜீ5 நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெறும் பொதுமக்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மீண்டும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!
வெற்றிமாறன் கதையில் சூரி- சசிகுமார்