நயன்தாராவின் திருமணத்தை மையமாக வைத்து ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்றும், 3 விநாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார்.
திரையுலகில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நயன்தாரா மீது வன்மத்தை கக்குவதாகவும் கருதப்படுகிறது.
நயன்தாராவுக்கு இந்த விஷயத்தில் மலையாள நடிகை பார்வதி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தங்களது ஆதரவை அளித்துள்ளனர். அதே வேளையில், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா இலவசமாக நடனமாடி கொடுத்திருந்தார் என்று அந்த சமயத்தில் கூறப்பட்டது. இவர்களுக்கிடையே இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, மற்றொரு காரணமும் சொல்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடித்த போதுதான் நயன்தாராவுக்கும் விக்னேசுக்கும் காதல் மலர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவு முதலில் 6 கோடிதான் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முழு படப்பிடிப்பு முடியும் போது 15 கோடி ஆகியுள்ளது.
இந்த படம் வெற்றி பெற்றிருந்தாலும் தனுஷுக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதிருந்தே நயன்தாரா, விக்னேஷ் சிவனிடத்தில் தனுஷ் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட நயன்தாராவுக்கு தனுஷ் அனுமதி வழங்காமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு தனுஷ் நிச்சயம் பதிலடி கொடுப்பார் . அப்போது, உண்மை நிலவரம் முற்றிலும் வெளி வருமென்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஓய்வில்லாமல் உழைக்கும் ஹவுரா பாலம்: ஹெல்த் செக்கப், 5 மணி நேரம் ரெஸ்ட்!
“அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல” – ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
Comments are closed.