யார் கண் பட்டது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக எந்த படங்களும் சரியாக ஓடவில்லை. குறிப்பாக இந்த ஆண்டு கேப்டன் மில்லர், அயலான் என இரண்டு பெரிய படங்கள் தான் இதுவரை ரிலீஸ் ஆகியுள்ளன.
தமிழ் திரைப்படங்களுக்கு படையெடுத்த ரசிகர் கூட்டம், தற்போது மலையாள சினிமாவின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளது. இது நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் இல்லை என்று சினிமா ஆலோசகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சில மாத இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமா மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராகி விட்டது. அந்த வரிசையில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரோமியோ’ மற்றும் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டியர்’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
மேலும் ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் ‘ரத்னம்’ திரைப்படமும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ திரைப்படமும் மோத இருக்கிறது. அதேபோல் மே 3-ம் தேதி ரெட்ரோ லுக்கில் கவின் மிரட்டும் ‘ஸ்டார்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மே 16 அன்று விஜய் சேதுபதி நடிப்பில் ‘மகாராஜா’ திரைப்படம் வெளியாகிறது. இது மட்டுமின்றி டிமாண்டி காலனி 2, சூது கவ்வும் 2 போன்ற திரைப்படங்களும் இந்த வரிசையில் உள்ளன.
மேற்கண்ட திரைப்படங்கள் மொத்தமாக சம்மரில் களமிறங்குவதால் இதன்மூலம் தமிழ் சினிமா தான் இழந்த இடத்தினை திரும்பப்பிடிக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவர்களோடு இணைந்து நாமும் காத்திருக்கலாம்!
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமநாதபுரம்: ஓபிஎஸ்சின் ‘கேரன்ட்டி’ வாக்குறுதிகள்!
ஹீரோவான பிக்பாஸ் போட்டியாளர்… சரியான ஜாக்பாட்… ரசிகர்கள் வாழ்த்து..!
ED விசாரணையில் நடந்தது என்ன? – அமீர் பேட்டி!