தியேட்டரில் இருந்து ரசிகர்கள் தலைவலியுடன் செல்லக்கூடாது- கங்குவா டீமுக்கு ரசூல் பூக்குட்டி அட்வைஸ்!

Published On:

| By Kumaresan M

கங்குவா படம் வெளியாகி நெகடிவ் விமர்சனங்களால் சமூகவலைத் தளங்களில் கழுவி  ஊத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இசையமைப்பில் பல குறைகள் இருப்பதாக பரவலாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தனது எக்ஸ் பக்கத்தில் , ‘தியேட்டருக்கு வந்து பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரை விட்டுச் செல்லும் போது சந்தோஷமாக செல்ல வேண்டும். தலைவலியுடன் செல்லக் கூடாது. இதற்காக மியூசிக் டைரக்டரை மட்டும் திட்டுவது சரியில்லை. கடைசி நேரத்தில், அவர்கள் மீது போடப்படும் பிரஷர் மற்றும் சாதாரண நடிகர்களை யுக புருஷர்களாக காட்ட சத்தம் மட்டுமே ஒரு வழியென நினைக்கும் கருத்துக் கொண்டவர்களின் செயல் தான் இதுபோன்று இசை மீது மோசமான விமர்சனம் வர காரணம் ‘ என்று கூறியுள்ளார்.

கங்குவா படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் 3 மணி நேரம் ரைஸ்மில்ல இருந்த மாதிரி இருந்துச்சுனு எக்ஸ் பக்கத்தில்  பலரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த படத்துக்கு கங்குவானு பெயர் வைப்பதற்கு பதிலாக கத்துவானு பெயர் வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின்  விமர்சனத்தை ஏற்று படத்தின் சத்தத்தை சற்று குறைத்தால் தான் படம் ஒரு வாரமாவது தாக்குப்பிடிக்கும், இல்லையென்றால் தியேட்டருக்கு படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள்.  சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியாக கங்குவா அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ”இன்றே பேசுங்கள்” : ஜெயம் ரவி, ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

’மோடி 100 மணி நேரம் உழைக்கும் போது, நாம் ஏன் உழைக்கக்கூடாது?’ : இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share