சர்ச்சையான கருத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்ததற்கு ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதனை ராஷ்மிகா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு பதில் கூறும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்று அறிக்கை ஒன்றின் மூலம் தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த விளக்கத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா, ”வணக்கம் அன்பே, இப்போதுதான் இதனை பார்த்தேன். நீங்கள் எந்த அர்த்தத்தில் அதை கூறினீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நம்மைப் பற்றி நாம் விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
ஏனெனில் நான் உங்கள் மீது அன்பும் மரியாதையும் மட்டுமே வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை உங்கள் ‘ஃபர்ஹானா’ படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இராமானுஜம்
10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விபரம்!
உச்ச நீதிமன்ற நீதிபதியானார் கே.வி.விஸ்வநாதன்