நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான புஷ்பா படம் நல்ல வெற்றியை பெற்றது.
கடந்த டிசம்பரில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். அல்லு அர்ஜூன் கேரியருக்கு முக்கியத் துவம் வாய்ந்ததாக இந்தப் படம் அமைந்துள்ளது.
‘புஷ்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கொரோனா தொற்று சமயத்தில் வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்தது.
இப்படத்தில் சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது.
இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் ஸ்கிரிப்டை இயக்குனர் சுகுமார் முடித்துவிட்டதாகவும், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது.
அதன்படி ஷூட்டிங் இப்போது தொடங்கிவிட்டது. முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில், நடிகை மட்டும் யார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது.
ராஷ்மிகா பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதால், தேதி பிரச்சனை காரணமாக புஷ்பா 2வில் நடிக்க மாட்டார் என்ற தகவலும் பரவியது.
ஆனால் அந்த தகவல் எல்லாம் பொய் என ராஷ்மிகாவே கூறியிருக்கிறார். தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்ட நிலையில், புஷ்பா 2 வில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
புஷ்பா சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்திருக்கிறது.
அந்த புகைப்படத்தை ரீ ட்வீட் செய்திருக்கும் ராஷ்மிகா, புஷ்பா 2 வுக்காக பெரும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறி தான் நடிப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
இதேபோல முதல் பாகத்தில் ‘ஊ சொல்றிய மாமா ‘ என்ற பாடலுக்கு நடனமாடிய சமந்தாவிற்கு பதிலாக இந்தப் படத்தில் தமன்னா நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.
சமந்தாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்த நிலையில், அதை தற்போது தமன்னா ஈடு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோகன்லால் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை!
சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?