தனுஷுடன் இணைந்த ராஷ்மிகா… மும்பையில் வேகமெடுக்கும் ஷூட்டிங்..!

Published On:

| By Minnambalam Login1

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் போன்ற பல முகங்களைக் கொண்டவர் தனுஷ். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுக்கக் கூடியவர்.

அவர் நடித்த திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என கடைசி மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. இதனையடுத்து நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார் தனுஷ்.

‘பவர் பாண்டி’க்கு பிறகு தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முழு ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதில் அவருடன் அபர்ணா முரளிதரன், தூஷாரா விஜயன், சந்தீப், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் நடிக்கின்றனர்.

திரைக்கதை முழுக்க, முழுக்க வட சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் டைட்டிலுக்கு நேர் மாறாக தனுஷ் பிச்சைக்காரர் போல் நிற்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்தது. தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் பத்து நாட்கள் நடக்க இருக்கிறதாம்.

தற்பொழுது தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா வில்லனாக நடித்து வருகிறார். வருகிற ஜூலை 28-ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் குபேரா பற்றிய முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம்… வெற்றிமாறன் இயக்க போகிறாரா?.. அவரே கூறிய பதில்…!

சேரன் வீட்டில் விசேஷம்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!