கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அவர் பிரபலமானது, பட வாய்ப்புக்கள் குவிய காரணம் தெலுங்கு சினிமா தான். குறிப்பாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இவரது நடிப்பு அவரை பொது தளங்களில் அடையாளப்படுத்தியது.
இதன்மூலம் அவருக்கு அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சரிலேரு நீகேவாரு படத்தில் தெலுங்கில் முதல்நிலை நடிகரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2021 டிசம்பர் 17 அன்று வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் ராஷ்மிகா மந்தனா.
இந்தப் படத்தில் நடிகை சமந்தா ஐட்டம்பாடல் ஒன்றுக்கு அல்லு அர்ஜுனுடன் நடனமாடியது பரபரப்பான செய்தியானது. இந்தப் படத்தின் புரமோஷனுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை இந்தியாவின் முக்கிய நகரங்களில் படக்குழு நடத்தியது அந்த வகையில் ஹைதராபாத், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ராஷ்மிகா அணிந்து வந்த உடை புஷ்பா படத்தில் சமந்தாவின் அரைகுறை ஆடையை பின்னுக்குத் தள்ளியது.
இந்திய சினிமாவில் ஒரே நாளில்பேசும் பொருளானார் ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில், மும்பையில் தனியார்விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து அதகளப்படுத்தி உள்ளார். ரெட் ஹாட் உடையில் தொடை முழுவதும் தெரிய அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இராமானுஜம்