Rasavathi Movie Teaser Released

மௌன குரு இயக்குநரின் அடுத்த படம் : “ரசவாதி” டீசர் ரிலீஸ்!

சினிமா

மௌன குரு, மகாமுனி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இயக்கிய மௌன குரு படத்தை தான் “அகிரா” என்ற பெயரில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்தார்.

தற்போது இயக்குனர் சாந்தகுமார் புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ – The Alchemist’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘ரசவாதி’ படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசர் முழுக்க எந்த வசனங்களும் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே இடம்பெற்றுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநாடு?

ஸ்டிரைக் முடிவு தொடரும் : போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி

கொடநாடு விவகாரம் : எடப்பாடி ஆஜராக உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *