நடிகரும், ரஞ்சிதாவின் தந்தையுமான அசோக்குமார், தனது மனைவியின் மரணத்திற்கு யார் காரணம் என்று தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. 1991 ஆம் ஆண்டு கடப்பா ரெட்டப்பா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
அதற்கு அடுத்த ஆண்டே பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ’நாடோடி தென்றல்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ரஞ்சிதா.

அதன்பின்னர் அர்ஜுனுடன் ஜெய்ஹிந்த், கர்ணா, சத்யராஜுடன் அமைதிப்படை, மம்மூட்டியுடன் மக்களாட்சி, விஜயகாந்துடன் பெரிய மருது, என் ஆசை மச்சான், பிரபுவுடன் சின்ன வாத்தியார், சரத்குமாருடன் கேப்டன், என பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதன்பின்னர் கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். எனினும் அடுத்த 2 ஆண்டுகளில் விவகாரத்து பெற்றார்.
தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், வில்லு உள்ளிட்ட சில படங்களில் துணை கதாப்பாத்ரத்திலும், கெளரவ வேடத்திலும் நடித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 2010ஆம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இருந்தாலும் தொடர்ந்து நித்தியானந்தாவின் பக்தையாகவே இருந்து வருகிறார் நடிகை ரஞ்சிதா.
பெண் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன்!
அவ்வபோது அவர் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் நடிகரும், ரஞ்சிதாவின் தந்தையுமான அசோக் குமார் தெலுங்கு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை, திருமணம், ரஞ்சிதா- நித்தியானந்தா சர்ச்சை என பல்வேறு விஷயங்கள் குறித்து உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.
ரஞ்சிதா குறித்து அவர் பேசுகையில், “காவல்துறையில் வேலைபார்த்த நிலையில் அதை ராஜினாமா செய்துவிட்டு, சினிமாவில் சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தேன். திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததும், நடிக்க வாய்ப்பு குறைந்தது.
இதனால் மனைவி மற்றும் நிர்மலா, ரஞ்சிதா, ஜோதி என்ற 3 பெண் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன்.

நித்யானந்தாவால் விவாகரத்து
இதில் 2வது பெண்ணான ரஞ்சிதா நடிகையாக நன்றாக வளர்ந்து வந்தார். அவருக்கு திருமணமும் நடைபெற்றது. ஆனால் சில காலத்திற்கு பிறகு (2010) கர்நாடகா ராமநகர் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின அது உண்மையா பொய்யா என்று தெரியாது.
ஆனால் ஒன்று உண்மை.. நித்யானந்தாவால் தான் காதலித்து திருமணம் செய்தவரை விவாகரத்து செய்தார்.

வேதனை தாங்காமல் மனைவி இறப்பு!
இதனால் கோபத்தில் நித்யானந்தாவிடம் சென்று, “வெட்கமாக இல்லையா? என் மகளை உங்கள் ஆசிரமத்தில் இருந்து திருப்பி அனுப்புங்கள்” என்று கோபத்தில் கத்தினேன். ஆனால் எனது மூத்த இரண்டு மகள்களும் நித்யானந்தாவின் மாயையிலிருந்து மீளாததால் அங்கு நான் பேசியதை எடுபடவில்லை.
இன்னமும் அவர்கள் இருவரும் நித்தியானந்தாவுடன் தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாங்க முடியாத என் மனைவி வேதனையால் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
தனது மூன்றாவது மகளுடன் தான் தற்போது நிம்மதியாக வசித்து வருவதாகவும், ஆனால் மற்ற இருவரும் இதுவரை எனக்கு ஒரு போன் போட்டு கூட பேசவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ் வழி பொறியியல் படிப்பு நிறுத்த உத்தரவு வாபஸ்: அண்ணா பல்கலைக்கழகம்