திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை த்ரிஷாவின் ராங்கி திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.
20 ஆண்டுகளில் பல ஹிட் படங்களைக் கொடுத்த நடிகை த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் 2022ஆம் ஆண்டின் சிறந்த நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது சரவணன் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள ராங்கி படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இதற்கு ராங்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ட்ரெயிலரை படக்குழு நேற்று வெளியிட்டது. ஆக்சன் காட்சிகளில் த்ரிஷா மிரட்டும் இந்த ட்ரெய்லரில் “ பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது” உள்ளிட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
வரும் 30ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ப்ரோமோஷன் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய வழியில் செல்கிறேன். ராங்கி ப்ரோமோஷன்” என்று தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
த்ரிஷாவின் புகைப்படத்தை பகிர்ந்து வரும் அவரது ரசிகர்கள், “அடி ராங்கியே ராங்கி ராங்கி… நீ போறீயே உசுற வாங்கி…” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் த்ரிஷாவின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
பிரியா
ஜெய் ஷாவுக்கு எதிர்பாராத பரிசு கொடுத்த மெஸ்ஸி.. ரசிகர்கள் குழப்பம்!