தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி பார்க்கப்படுகின்றனர். இந்த தம்பதிக்கு தேவ், தியா இரு குழந்தைகள் உள்ளனர். சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு, ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி விட்டார்.
அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். குழந்தைகளின் படிப்பு கருதியும் வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள வசதியாகவும் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. அதே வேளையில் , சென்னை வந்தால் மாமனார் சிவக்குமார் வீட்டில் தங்குவதாகவும் ஜோதிகா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் மும்பையில் நடந்த பிலிம்பேர் விருது விழா நிகழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து ஜோதிகா போஸ் கொடுத்தார். ஜோதிகா வழக்கமாக இதுபோன்ற விழாக்களில் பாரம்பரிய உடைகளில் காணப்படுவது வழக்கம்.
கருப்பு நிற பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருக்கும் உள்ளாடை வெளியே தெரியும் வகையில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பிறகு இப்படி கவர்ச்சி உடையில் வரலாமா? என்றும், இதற்கு எப்படி சூர்யா அனுமதித்தார் என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினர்.
இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் ஜோதிகா பற்றி கூறுகையில், நடிகை ஜோதிகா சென்னை வந்தாலும் மாமனார் சிவக்குமார் வீட்டில் தங்குவது இல்லை என்றும் விமானநிலையம் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா மட்டும் டி.நகரிலுள்ள வீட்டுக்கு சென்று பெற்றோரை பார்த்து விட்டு செல்வதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், பிலிம்பேர் நிகழ்ச்சியில் ஜோதிகா கவர்ச்சி உடை அணிந்ததை அவருடைய கணவரே ஏற்றுக்கொண்ட போது, நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சந்திரபாபு நாயுடுவின் சமயோசித புத்தி… டாடா குழுமத் தலைவரை வளைத்த பின்னணி!
ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)