animal one week box office report

அனிமல் வசூல் வேட்டை… அலறவிடும் ஒருவார கலெக்‌ஷன்!

சினிமா

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி வெளியான படம் “அனிமல்”.

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

A சான்றிதழுடன் வெளியான அனிமல் படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் 23 வினாடிகள். அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.

அனிமல் படத்தின் ஜந்து நாள் வசூல் மட்டும் 481 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அனிமல் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை உலகளவில் 527 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அனிமல் படம் வசூல் ரீதியாக மெகா பிளாக் பஸ்டர் படம் என்ற பட்டியலில் இணைந்துவிட்டது. மேலும் உலகளவில் அனிமல் படம் 900 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

”தண்ணீர் வடியாத நாடு…. நீர் தேடி சந்திரயான் அனுப்புவது ஏன்?” : பார்த்திபன் ஆதங்கம்!

மழை பாதிப்பு: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த ராஜ் நாத் சிங்… முதல்வருடன் ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1