அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. அதன் பிறகு அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக் ஆன “கபீர் சிங்” படத்தையும் இவரே இயக்கினார். தற்போது இவர் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் “Animal”.
சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் போஸ்டர்களும், glimpse வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் Animal படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமான மனிதர்களாக அனில் கபூரும், ரன்பீர் கபூரும் மாறி மாறி மிரட்ட, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. இதுவரை ரன்பீர் கபூரை இப்படி ஒரு ஆக்ஷன் அவதாரில் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
Animal படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Animal படம் டிசம்பர் 01,2023 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
போலீஸுக்கு லியோ தயாரிப்பாளர் எழுதிய கடிதம்!
’பசுமை புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!