நடிகை ரம்யா பண்டியனுக்கும் பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் விரைவில் காதல் திருமணம் நடைபெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
யோகா கற்றுக்கொள்ள பெங்களூரு சென்ற போது பஞ்சாபைச் சேர்ந்த லோவல் தவான் என்கிற இளைஞரை சந்தித்துள்ளாராம் ரம்யா பாண்டியன். இருவரது மனதிற்கும் பிடித்துப் போக காதல் திருமணத்தில் வந்து முடிந்துள்ளதாம் .
இவர்களது திருமணம் ரிஷிகேஷிலும், திருமண வரவேற்பு சென்னையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’, ‘நன்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் ’பிக் பாஸ்’, ‘குக் வித் கோமாளி’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இவர் 1994ஆம் ஆண்டு வெளியான ‘ஊழியன்’ படத்தை இயக்கிய இயக்குநர் துரை பாண்டியனின் மகளாவார். ‘இணைந்த கைகள்’ , ‘ஊமை விழிகள்’ , போன்ற படங்களில் நடித்த நடிகர் அருண் பாண்டியன் இவரது சொந்த தாய் மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ரம்யாவுக்கு விமர்சனரீதியாக பல பாராட்டுகள் கிடைத்தது. அதற்கு பிறகு 2023ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்கத்தில் வெளியான ‘நன்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடித்தார் ரம்யா பாண்டியன்.
இடுப்பில் கொலுசு கட்டி ரம்யா பாண்டியன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு பிறகு ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கென தனி ரசிகர் கூட்டம் சமூக வலைதளங்களில் உருவானது.
இந்த நிலையில், தற்போது இவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ரம்யா பாண்டியன் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘மர்மதேசம்’ இயக்குநரின் ரீ-எண்ட்ரி!
கிச்சன் கீர்த்தனா : மாப்பிள்ளை சம்பா அதிரசம்
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : கேட்டை (18.10.2024 முதல் 15.11.2024 )