நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘படையப்பா’. இந்தப் படத்தில் ‘நீலாம்பரி’ கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
அந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு இணையாக ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் இருந்தது. படையப்பா படத்திற்கு முன் ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா இன்றளவும் பேசப்படுவதற்கு ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டர்தான். காலம் கடந்தும் நினைவில் நிற்கும் கதாபாத்திரம் அது.
அதன்பிறகு ரம்யாகிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்காத நிலையில், மீண்டும் 23 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க இருக்கிறார்.
இராமானுஜம்
இது ஒரு காதல் காவியம்… சீதா ராமம் வெற்றி மகிழ்ச்சியில் படக்குழு!