தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வரும் வகையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் 90 களில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா இன்று (ஜூலை 17) தனது குடும்பத்தினருடன் விஜயை சந்தித்துள்ளார்.
ரம்பாவுடன் அவரது கணவர் இந்திரகுமார் பத்மநாதன், மகள்கள் லாவண்யா, ஷாஷா மற்றும் மகன் ஷிவின் ஆகியோரும் விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நடிகர் விஜயுடன் இணைந்து நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் கதாநாயகியாக ரம்பா நடித்துள்ளார். மேலும் விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த சுக்ரன் படத்தில் இடம்பெற்ற சாத்திகோடி என்ற பாடலுக்கும் அவருடன் இணைந்து ரம்பா நடனமாடியுள்ளார்.
இந்த திடீர் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களது தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 அன்று திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கனடா நாட்டில் வசித்து வரும் ரம்பா, அந்நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும் திருமணம் : பெற்றோர் மீது வழக்குப்பதிவு!
சமயபுரம் சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்: வேன் மோதி 5 பேர் பலி!