தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகனாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர், ராமராஜன்.
‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
குறிப்பாக கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்து வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் நீண்ட நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.
அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற உறுதியுடன் இருந்தவரின் மார்க்கெட் சரியத் தொடங்கியது.
2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்திற்கு பிறகு இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டு ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அரசியலில் சில காலம் பயணித்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
சாமானியன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழ் சினிமாவில் திரைக்கதை தட்டுப்பாடா?
குளியல் வீடியோ லீக்: தொடரும் மாணவிகள் போராட்டம்!