நடிகையின் காலை வருடிய பிரபல இயக்குநர்: வீடியோ வைரல்!

சினிமா

ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கும் படங்கள் மட்டுமின்றி பொது வெளியில் இவரின் செயல்பாடுகளும் , பேச்சுகளும் பலமுறை சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ராம் கோபால் வர்மா என்ற பெயர் வந்தாலே சமூக வலைதளமே அதிரும் அளவிற்கு பல சம்பவங்களும் நடந்துள்ளன.

அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு புதிய விவகாரத்தில் இவர் இணையத்தை அதிரவைத்துள்ளார். நடிகை ஆசு ரெட்டியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் டிசம்பர் 6 ஆம் தேதி ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில், ஆசு ரெட்டி சோபாவில் அமர்ந்திருக்க அவரின் கால் அருகில் ராம் கோபால் வர்மா உட்கார்ந்திருக்கிறார்.

மேலும் அந்த பதிவில்,”ஆபத்தான (Dangerous) என்னுடன் இரட்டிப்பு ஆபத்தான (Double Dangerous) ஆசு ரெட்டி. முழு வீடியோவை இன்று (அதாவது டிசம்பர் 6 ) இரவு 9.30 மணிக்கு வெளியிடுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த படத்தையொட்டி, ராம் கோபால் வர்மா எடுத்த பேட்டியின் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்தார். தொடர்ந்து, ஆசு ரெட்டியுடனான அவரது பேட்டியை தனது யூ-ட்யூப் சேனலிலும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், ஆசு ரெட்டியின் காலின் அருகே அமர்ந்தவாறே பேட்டி எடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, ஆசு ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நேற்று (டிசம்பர் 7 ) அவரது கால் பாதத்தை ராம் கோபால் வர்மா முத்தமிடும் காட்சியை பதிவிட்டிருந்தார்.

ஆனால், முழுமையான பேட்டியில், அவரது கால் பாதத்தை முத்தமிட்டது மட்டுமின்றி, பாதத்தை நாக்கால் வருடும் வீடியோ காட்சியையும் வெளியிட்டிருந்தார்.

ராம் கோபால் வர்மாவின் இந்த செயல் சமூக வலைதளத்தில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவருக்கு ஆதரவாகவும் , இவரின் செயலை கண்டித்தும் நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நகரும் மாண்டஸ்: சீற்றத்துடன் காணப்படும் கடல்!

குஜராத் வெற்றி: சொன்னதை செய்த மோடி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *