ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

சினிமா

தெலுங்கு திரையுலகில் மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு உலகளவில் ஃபேமஸ் ஆன நடிகர் ராம்சரண், தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ராம் சரணுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், தற்போது நடிகர் ராம் சரணுக்கு சென்னையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடக்கவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த விழாவில் நடிகர் ராம் சரணின் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் ராம் சரணுக்கு வழங்க இருக்கிறார். மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்:  அசிடிட்டி… அலட்சியம் வேண்டாம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கு ஏற்றதா ஐஸ் வாட்டர் ஃபேஷியல்?

கிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *