ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’: ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். தற்போது இவரது நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்கு கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக உள்ள தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேம் சேஞ்சர் படத்தை 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
https://twitter.com/SVC_official/status/1716473590949052716
“ஜரகண்டி” என்று பெயரிடப்பட்டுள்ள கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ராம் சரணுக்கு வெளியாக உள்ள படம் என்பதால் கேம் சேஞ்சர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ராவணனின் மாமனார் வீடு… ராஜஸ்தான் யாருக்கு?
சென்னையின் ஆதரவு… நன்றி தெரிவித்த ஆப்கான் வீரர்கள்: பாபர் ரியாக்சன்!