தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண். அவர் அணிந்திருந்த தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடைக்காக, சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொண்ட நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் சர்வதேச அளவில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இரு கதாநாயகர்களில் ஒருவராக ராம்சரண் நடித்திருந்தார்.
வணிகரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தினை படைப்பு ரீதியான அங்கீகாரத்தை பெறும் முயற்சியை இயக்குநர் ராஜமவுலி தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு வருகிறார்.
இதன்மூலம் தெலுங்கு திரைப்படங்கள் சர்வதேச சினிமா சந்தையின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது நாள்வரை இந்தி சினிமாவிற்கு இருந்து வந்த முக்கியத்துவம் தெலுங்கு சினிமாவிற்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
இதனை சாத்தியமாக்குவதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில், ஆர்ஆர்ஆர் படத்தை திரையிடவும், அந்த நேரத்தில் படத்தில் நடித்த திரைக்கலைஞர்கள் பங்கேற்பதற்கான முயற்சிகளை ராஜமவுலி செய்திருந்தார்.
அதற்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து வந்தனர், வருகின்றனர். சமீபத்தில் கோல்டன் குளோப் விருது விழாவில், நவீன பாணியிலான உடைகளை அணிந்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இதில் நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண், அவர் அணிந்திருந்த தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடைக்காக, ‘சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது தனி சிறப்பு.
கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி மற்றும் அவரது குழுமத்தின் தயாரிப்பில் உருவான ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தார் ராம்சரண்.
இராமானுஜம்